17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கார்பரேட் கம்பெனிகளுக்கே உதவுகிறார் மோடி: ஐ.பெரியசாமி குற்றச்சாட்டு….

கார்பரேட் கம்பெனிகளுக்கே உதவுகிறார் மோடி: ஐ.பெரியசாமி குற்றச்சாட்டு….

எழுதியவர்: ஆசிரியர் November 27, 2018, 9:04 pm

இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி திமுக செயல் வீரர்கள் கூட்டம் இன்று (27.11.18) நடந்தது. தொகுதி பொறுப்பாளரும், துணை பொதுச் செயலாளருமான இ.பெரியசாமி தலைமை வகித்தார். கூடுதல் பொறுப்பாளர்கள் திருக்குவளை மேகநாதன், கழுகுமலை சுப்ரமணியன் முன்னிலை வகித்தனர். மாவட்ட கழக செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், முன்னாள் அமைச்சர்கள் சுப. தங்கவேலன், சத்தியமூர்த்தி, முன்னாள் எம்.பி., பவானி ராஜேந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் முருகவேல், திசைவீரன், முன்னாள் மாவட்ட செயலாளர் திவாகரன், பெருநாழி போஸ் ஆகியோர் பேசினர்.

திமுக துணை பொதுச் செயலர் ஐ.பெரியசாமி கூறுகையில், இராமநாதபுரம் லோக்சபா தொகுதி தேர்தலில் இரண்டு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் திமுக கூட்டணி வெற்றி பெறும். திமுக ஆதரவுடன் மத்திய ஆட்சி அமையும் பட்சத்தில் சேது சமுத்திர திட்டம், காவிரி குண்டாறு இணைப்பு திட்டம் கட்டாயம் செயல்படுத்தப்படும். தமிழகத்தில் அதிமுக, பாஜக தவிர அனைத்து கட்சிகளும் தற்போது ஓரணியில் உள்ளன. கார்பரேட் கம்பெனிகளுக்கு உதவும் மோடி, நாட்டுக்கு நல்லது செய்ததாக தெரியவில்லை. கூட்டணி தொடர்பான அனைத்து முடிவுகளையும் தலைவர் ஸ்டாலின் மட்டும் முடிவு எடுப்பார் என்றார். மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஏ.சி.ஜீவானந்தம் நன்றி கூறினார்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!