17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருப்புல்லாணி அரசு பள்ளியில் சிறுவர் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் ..

திருப்புல்லாணி அரசு பள்ளியில் சிறுவர் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் ..

எழுதியவர்: ஆசிரியர் November 25, 2018, 1:29 am

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றம சார்பில் சிறுவர் பாரம்பரிய விளையாட்டு விளையாடும் நிகழ்ச்சி நடந்தது.

சிறுவர் சிறுமியரின் அறிவை வளர்த்து அவர்களை சிந்தித்து செயல்பட வைக்கும் பாரம்பரிய விளையாட்டுகளை சில ஆண்டுகளுக்கு முன் வரை விளையாடி மகிழ்ந்தனர். மறைந்துவரும் இத்தகைய விளையாட்டுகளை பள்ளியில் ஒய்வு நேரங்களில் விளையாடச் செய்வதன் மூலம் மாணவர்களின் மன அழுத்தம் குறைந்து நன்றாக செயல்பட உதவும். இவ்விளையாட்டுகள் குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

ஒன்பதாம் வகுப்பு மாணவி ச.ஹர்ஷினி வரவேற்றார். பள்ளித் தலைமையாசிரியர் கூ.செல்வராஜ் தொடங்கி வைத்தார். கொல கொலையா முந்திரிக்கா, நொண்டி, பச்சக்குதிரை, தட்டாங்கல், தாயம், பூப்பறிக்க வருகிறோம், பூவரசு பீபீ, பல்லாங்குழி, ஆடுபுலி ஆட்டம் உள்ளிட்ட சிறுவர் பராம்பரிய விளையாட்டுகளை மாணவ மாணவிகள் விளையாடினர்.

ஒன்பதாம் வகுப்பு மாணவி மு.பவித்ரா நன்றி கூறினார். மாணவி இரா.கோகிலா தொகுத்து வழங்கினார். மன்ற பொறுப்பாசிரியர் வே.ராஜகுரு, மாணவர்கள் முத்துமாரி, அபுரார் அகமது, பானு, மனோஜ், ஜனார்தனன், முகமது பாஷில், ரித்திகா, ஷாலினி ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!