17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உதவியால் தமிழகத்தில் முதன்முறையாக உணவகம் திறந்த திருநங்கை…

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உதவியால் தமிழகத்தில் முதன்முறையாக உணவகம் திறந்த திருநங்கை…

எழுதியவர்: ஆசிரியர் November 23, 2018, 6:20 pm

தூத்துக்குடி சவோரியார்புரம் பகுதியில் நங்கை என்ற பெயரில் திருநங்கை ஒருவர் குறைந்த விலையில் உணவகம் தொடங்கி உள்ளார்.

தூத்துக்குடியில் வாரம்தோறும் திங்கள் கிழமை நடைபெறும் மக்கள் குறைக்கேட்கும் நிகழ்வில், சமூக நலத்துறை சார்பாக திருநங்கைகளுக்கு தலா இருபதாயிரம் வீதம் பத்து பேருக்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வழங்கினார்.

இந்த உதவி பெற்ற திருநங்கை காயத்ரி தூத்துக்குடி சவோரியார்புரம் பகுதியில் நங்கை என்ற பெயரில் குறைந்த விலை உணவகம் தொடங்கினார். இதனை தாளமுத்து காவல் ஆய்வாளர் சங்கர் திறந்து வைத்தார்.

திருநங்கை ஒருவர் உணவகம் திறந்திருப்பது தமிழகத்தில் இதுவே முதல் முறை என கருதப்படுகிறது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!