18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கஜா புயல் நிவாரணத்திற்கு நிதி வழங்கிய பள்ளி மாணவர்கள்…

கஜா புயல் நிவாரணத்திற்கு நிதி வழங்கிய பள்ளி மாணவர்கள்…

எழுதியவர்: ஆசிரியர் November 23, 2018, 12:38 pm

இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் பேராவூர் துவக்கப்பள்ளியில் 69 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இப்பள்ளி மாணவர்கள் அரசு திட்டங்கள் குறித்து மக்களிடம் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களில் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தை கடந்த வாரம் புரட்டி போட்ட கஜ புயல் தாக்கம் குறித்து அச்சு மற்றும் மின் ஊட கங்களில் வெளியான செய்திகள், காணொளி காட்சிகள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியான புயல் பாதிப்பு நிகழ்வுகளை இப்பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் காண்பித்து நிவாரணம் வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

இதையடுத்து இப்பள்ளி மாணவ, மாணவியர்கள் தங்கள் வீடுகளில் உண்டியல்களில் உள்ள சேமிப்பு தொகையை புயல் நிவாரணமாக வழங்குவதென தீர்மானித்தனர். இம்முடிவு குறித்து வகுப்பாசிரியர்களிடம் மாணவர்கள் தெரிவித்தனர். இதை தொடர்ந்து 69 மாணவ, மாணவிகளின் உண்டியல் சேமிப்பு தொகை ரூ.2,900 ஐ மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவிடம், தலைமை ஆசிரியை கா. காளீஸ்வரி முன்னிலையில் இன்று (23.11.18) வழங்கினர். இதை பெற்றுக் கொண்ட ஆட்சியர் மாணவர்களின் உதவும் மனப்பான்மையை மனமுவந்து பெரிதும் பாராட்டினார்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!