18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » பழனியில் நகராட்சியின் முறைகேடுகள் மற்றும் அலட்சியப் போக்கினை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…

பழனியில் நகராட்சியின் முறைகேடுகள் மற்றும் அலட்சியப் போக்கினை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…

எழுதியவர்: ஆசிரியர் November 22, 2018, 9:42 pm

பழனி தமிழ்நாட்டின் மிகச் சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது.இந்நகருக்கு ஆண்டுதோறும் பல லட்சம் மக்கள் வந்து செல்கின்றனர். ஆனால் பழனி நகர் முழுவதும் குப்பை, சாக்கடை, துர்நாற்றம் ஆகியவை அதிகமாக காணப்படுகின்றது. இதனைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் பழனியில் உள்ள பல வார்டுகளில் தெருவிளக்குகள் சரியாக எரிவதில்லை. சாக்கடை மற்றும் குப்பைகளை வாரத்திற்க்கு ஒரு முறை மட்டுமே அகற்றுகின்றனர்.நகர் முழுவதும் கொசுக்கள் அதிகமாக இருப்பதால் பல்வேறு வியாதிகள் வருகின்றனர்.எனவே நகராட்சி ஊழியர்கள் கொசுமருந்தினை சரியாக அடிப்பதில்லை.

வார்டுகளில் உள்ள மினிபவர் மோட்டார்களை சரிவர இயக்குவதில்லை நகரின் முக்கிய வீதிகள் இரண்டு சக்கர வாகணம் செல்ல முடியாத அளவுக்கு குண்டும் குழியுமாக உள்ளது.இது போன்ற கோரிக்கைகளை உடனே சரி செய்ய வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இந்த ஆர்ப்பாட்டத்தின் தலைமையாக ராஜாவும் சிறப்புறையாக கந்தசாமியும் கலந்து கொண்டனர். இறுதியாக நகராட்சி நிர்வாகத்தக கண்டித்து பல்வேறு விதமான கோசங்களக எழுப்பினர்…..

பழனி செய்தியாளர்:-ரியாஸ்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!