17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » பழனி 20வது வார்டில் குடிநீர் சீராக வினியோகிக்க பொது மக்கள் கோரிக்கை..

பழனி 20வது வார்டில் குடிநீர் சீராக வினியோகிக்க பொது மக்கள் கோரிக்கை..

எழுதியவர்: ஆசிரியர் November 21, 2018, 8:50 pm

திண்டுக்கல் மாவட்டம் பழனி நகராட்சிக்குட்பட்ட 20வார்டு அம்பலகாரர் தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த கடந்த 30 நாட்களுக்கு மேலாக பொதுக்குழாயில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர்.

மேலும் காசு கொடுத்து குடிநீர் வாங்கி குடிக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. குடிநீர் வராததை கண்டித்தும், குடிநீரை சீராக வினியோகிக்க கோரியும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அந்தப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பல முறை புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு அந்த ஏரியா மக்களின் வேண்டுகோள்.

பழனி செய்தியாளர்:-ரியாஸ்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!