18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் மீலாது விழா..

கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் மீலாது விழா..

எழுதியவர்: ஆசிரியர் November 21, 2018, 3:08 pm

கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் முகம்மது சதக் பொறியில் கல்லூரி, செய்யது ஹமீதா அரபிக் கல்லூரி, செய்யது ஹமீதா அறிவியல் மற்றும் கலைக் கல்லூரி, இராமநாதபுரம் முகம்மது தஸ்தகீர் மெட்ரிக் பள்ளி, முகம்மது தஸ்தகீர் கல்வியியல் கல்லூரி மற்றும் முகம்மது சதக் ஹமீது அறிவியல் மற்றும் கலை கல்லூரி ஆகியோர் இணைந்து நடத்திய மீலாது விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் முஹம்மது சதக் அறக்கட்டளையின் தலைவர், கல்லூரியின் செயலாளர், மேலத்தெரு உஸ்வத் ஹஸ்னா சங்கத் தலைவர் மற்றும் முக்கய உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக நடுத் தெரு ஜீம்ஆ மஸ்ஜித் துணை இமாம், மின் ஹாஜியர் ஜீம்ஆ பள்ளி கத்தீப் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு நபிகள் நாயகத்தின் நெறிமுறைகள் மற்றும் வாழ்கை வரலாற்றை பற்றி விரிவுரையாற்றினார்.

மேலும் முன்னாள் எம்.எல்.ஏ ஹசன் அலி மற்றும் முகம்மது சதக் பெறியியல் கல்லூரியின் விரைவுரையாளர் முகம்மது ஆசிக் ஆகியோர் நன்றியுரை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் பாலிடெக்னிக் துணை முதல்வர்கள், துறைத் தலைவர் மற்றும் ஆசிரியர்கள், கீழக்கரையைச் சார்ந்த பல்வேறு ஜமாத்தார்கள், அரபிக் கல்லூரி மாணவர்கள், முகம்மது சதக் ஐ.டி.ஐ மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் இறுதியில் கல்லூரியின் விரிவுரையாளர் செய்யது மதார் நன்றியுரையாற்றினார். இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரியின் முதல்வர் டாக்டர் அ.அலாவுதீன் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!