18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » கோவில்பட்டியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி..

கோவில்பட்டியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி..

எழுதியவர்: ஆசிரியர் November 20, 2018, 4:44 pm

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்ட செயலாளர் சுந்தர்ராஜ் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மண்டல பொறுப்பாளர் மாணிக்கராஜா கலந்துகொண்டு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

நகர செயலாளர் நாகராஜன், மேற்கு ஒன்றிய செயலாளர் ஈஸ்வர பாண்டியன், கோவில்பட்டி தொகுதி பொறுப்பாளர் செல்வம், மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர்கள் மாரிமுத்துப்பாண்டியன், கணபதி பாண்டியன், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி கருப்பசாமி, நிர்வாகிகள் வேலு, செண்பக ராமன், பி.வி. சீனிவாசன், வழக்கறிஞர் சங்கர் கணேஷ், ஜெய்சங்கர், மலைச்சாமி, சொர்ண ஆனந்த் உள்பட பல கலந்து கொண்டனர்..

செய்தி:- தூத்துக்குடி: அஹமது

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!