17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கல்வி » கீழக்கரை செய்திகள் » நிகழ்வுகள் » கீழக்கரை அல் பய்யினா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற பரிசளிப்பு விழா நிகழ்ச்சி

கீழக்கரை அல் பய்யினா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற பரிசளிப்பு விழா நிகழ்ச்சி

எழுதியவர்: keelai March 1, 2017, 8:18 pm

கீழக்கரை கிழக்குத் தெருவில் இயங்கி வரும் அல் பய்யினா மெட்ரிகுலேஷன் பள்ளியின் மாணவ செல்வங்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி இன்று 01.03.17 மாலை 4.30 மணியளவில், பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த பரிசளிப்பு விழா நிகழ்ச்சியினை பள்ளியின் தாளாளர் ஜாபிர் சுலைமான் தலைமையேற்று நடத்தினார். பள்ளியின் சட்ட ஆலோசகர் முஹம்மது சாலிஹ் ஹுசைன் வரவேற்புரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினராக டாக்டர் ஹலீனா ரஜியா தவ் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

இந்த விழாவிற்கு ஹைராத்துல் ஜலாலியா மேல் நிலை பள்ளியின் தாளாளர் பேராசிரியர் டாக்டர் ஜகுபர் சாதிக், ஹைராத்துல் ஜலாலியா தொடக்கப் பள்ளியின் தாளாளர் ஜவஹர் சாதிக், கிழக்குத் தெரு ஜமாஅத் துணை பொருளாளர் முஹம்மது அஜிஹர், முஹம்மது சதக் கல்லூரியின் பேராசிரியர். சமூக சிந்தனையாளர் அஹமது ஆசிப், பள்ளியின் அகடெமிக் டீன் அப்துல் நாசர் ஜமாலி, பள்ளியின் மேலாண்மை நிர்வாக அதிகாரி செய்யது கபீர்  ஆகியோர் முன்னிலை வகித்து, பல்வேறு போட்டிகளில் பங்கெடுத்து வெற்றி பெற்ற பள்ளியின் மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர். விழா நிகழ்ச்சிகளை பள்ளியின் ஆசிரிய பெருமக்கள் தொகுத்து வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பெற்றோர்கள் கலந்து கொண்டு, தங்கள் பிள்ளைகளை வாழ்த்தினர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!