18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » தீப்பெட்டி பொருட்களுடன் எரிந்த லாரி…வீடியோ ..

தீப்பெட்டி பொருட்களுடன் எரிந்த லாரி…வீடியோ ..

எழுதியவர்: ஆசிரியர் November 20, 2018, 12:03 am

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலமத்தை சேர்ந்த வெங்கடாச்சலம் மகன் சுகுமார் (32). லாரி டிரைவரான இவர் இன்று (19/11/2018) கோவில்பட்டி அருகேயுள்ள கழுகுமலையில் இருக்கும் தீப்பெட்டி ஆலையில் இருந்து தீப்பெட்டி பண்டல்கள் ஏற்றிக்கொண்டு, ராஜஸ்தானுக்கு சென்று கொண்டு இருந்தார்.

லாரி காலாங்கரைப்பட்டியை கடந்து வந்த போது, தீப்பெட்டி பண்டல்கள் மீது மரக்கிளைகள் உரசி உள்ளன. இதில் தீப்பெட்டி பண்டல்கள் தீப்பிடித்து எரிந்தது. இதை கவனிக்காமல் சுகுமார் லாரியை ஓட்டிச் சென்றார். இதனால் சாலையில் தீப்பெட்டி பண்டல்கள் எரிந்து கீழே விழுந்து கொண்டே வந்தன. அப்போது சாலையோரம் நடந்து சென்ற மக்கள் பார்த்து தீப்பிடித்து எரிவது குறித்து அவரிடம் கூறினார். உடனடியாக அவர் லாரியை வானரமுட்டி கோயில் அருகே உள்ள ஆயா ஊருணியில் லாரியை இறங்கி விட்டு உயிர் தப்பினார்.

தகவலறிந்து கோவில்பட்டி தீயணைப்பு நிலைய முதன்மை தீயணைப்பாளர் முருகானந்தம் தலைமையிலும், கழுகுமலை தீயணைப்பு நிலைய நிலைய அலுவலர் பொன்ராஜ் தலைமையிலும் சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் தீப்பெட்டி பண்டல்கள் முற்றிலும் எரிந்து நாசம் அடைந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.10 லட்சமாகும். இது குறித்து நாலாட்டின்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தி வி.காளமேகம்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!