17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை அரசு மருத்துவமனை வளாகத்தில் தூய்மை பணி..

கீழக்கரை அரசு மருத்துவமனை வளாகத்தில் தூய்மை பணி..

எழுதியவர்: ஆசிரியர் November 17, 2018, 1:35 pm

கீழக்கரை அரசு மருத்துவமனை வளாகம் முழுதும் புல் மற்றும் ஆங்காங்கே சிதறி கிடக்கும் மருத்துவ கழிவுகள், கல் மற்றும் மண் கழிவுகளை தூய்மை படுத்தும் சுகாதாரப் பணி இன்று (17/11/2018) நடைபெற்றது .

இதுகுறித்து அரசு தலைமை மருத்துவர் ஜவாகீர் உசேன் அவர்கள் தெரிவிக்கையில் ” மழை நேரமாக இருப்பதால் தொற்று நோய்கள் மற்றும் இன்ன பிற நோய்கள் பரவும் வாய்ப்புள்ளது. அதை  கருத்தில் கொண்டு கீழக்கரை அரசு மருத்துவமனை வளாகத்தை சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டு வருகிறோம். மேலும் அரசு மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு பன்றி காய்ச்சல் பரவுவதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம் ” என்றார்.

இந்நிகழ்வின் போது  கீழக்கரை பழைய ஜீம்மா பள்ளி முன்னாள் தலைவர் ஹாஜ மைதீன், அன்வரலி அவர்கள் உடனிருந்து அதற்கு தேவையான பொருளாதார உதவிகளையும் செய்தனர்.

தகவல்: மக்கள் டீம்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!