17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கஜா புயலின் வருகையால் ஆத்தூர் காமராசர் நீர்தேக்கத்திற்க்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி!!..வீடியோ..

கஜா புயலின் வருகையால் ஆத்தூர் காமராசர் நீர்தேக்கத்திற்க்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி!!..வீடியோ..

எழுதியவர்: ஆசிரியர் November 16, 2018, 6:28 pm

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே அமைந்துள்ள காமராசர் நீர்தேக்கம் திண்டுக்கல் வாழ் மக்களுக்கும், சுற்றியுள்ள கிராம பொதுமக்களுக்கும் குடிநீர் ஆதாரமாகவும் விவசாய விளை நிலங்களுக்கும் பயன்பட்டு வருகிறது. கடந்த சிலநாட்களாக இந்த பகுதியில் போதிய மழை இல்லாத காரணத்தால் வறட்சியின் காரணமாக நீர் தேக்கத்தின் கொள்ளவு 24 அடியாக இருந்த போதிலும் 9.5 அடிமட்டுமே இருந்தது.

தற்போது கஜா புயலின் வருகையின் காரணமாக இன்று பெய்த மழையால் கூலையாறு கன்னிமார் கோயில் வழியாக நீர்வரத்து அதிகமாக காமராசர் நீர்தேக்கத்தை நோக்கி கரைபுரண்டு வருவதால் நீர்தேக்கத்தின் கொள்ளலவு தற்போதைய நிலவரத்தின்படி சுமார் 17 அடியை நெருங்கும் நிலைஉள்ளது. இதனால் பொதுமக்களும் பகுதி விவசாயிகளும் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!