17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருப்புல்லாணி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்…

திருப்புல்லாணி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்…

எழுதியவர்: ஆசிரியர் November 15, 2018, 1:02 am

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி புல்லாணி மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகாசலை பூஜைகள் அனுக்கை விக்னேசுவர பூஜை, காப்புக்கட்டுதலுடன் நேற்று (13.11.18) தொடங்கியது. யாகசாலை பூஜைகளை பாபு சாஸ்திரிகள் தலமையில் சிவாச்சாரியார்கள் நடத்தினர். இன்று (14.11.18) அதிகாலை கோ பூஜை, யாத்ரா தானம், மகா பூர்ணாகுதி தீபாராதனை நடந்து முடிந்த பின்னர் புனித நீர் கடங்கள் யாகசாலையிலிருந்து புறப்பட்டு ராஜகோபுரம் அடைந்தன. இதனையடுத்து சிவாச்சாரியார்கள் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றினர்.

பின்னர் மூலவரான புல்லாணி மாரியம்மனுக்கும், உடனுறை பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம், . விசேஷ தீபாராதனைகள் நடந்தன. மூலவர் புல்லாலாணி மாரியம்மன் சந்தன அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தது. திருப்புல்லாணி வடக்குத்தெரு, மேலத்தெரு, ஜெகன் நகர் பொதுமக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!