18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு…

பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு…

எழுதியவர்: ஆசிரியர் November 15, 2018, 12:47 am

இராமநாதபுரம் அருகே மாடக்கொட்டாக் மாயபுரம் கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து மனைவி பாலாமணி, (55). இவர் தனது வீட்டிலிருந்து ஆட்டோவில் ராமநாதபுரம் பட்டணம் காத்தான் தர்ம முனீஸ்வரர் கோயிலுக்கு சுவாமி கும்பிட வந்தார். ஆட்டோவில் இருந்து இறங்கி சிறிது தூரம் நடந்து சென்ற போது இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு பேர் பாலாமணி கழுத்தில் அணிந்திருந்த 12 பவுன் தாலி செயினை பறித்து கொண்டு தப்பிச் சென்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக பாலாமணி புகாரில் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!