17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாவட்ட செய்திகள் » டில்லியில் குழந்தைகள் தின விழாவில் இராமநாதபுரம் மாணவர்கள் கட்டைக் கால் சிலம்பாட்டம்..

டில்லியில் குழந்தைகள் தின விழாவில் இராமநாதபுரம் மாணவர்கள் கட்டைக் கால் சிலம்பாட்டம்..

எழுதியவர்: ஆசிரியர் November 15, 2018, 12:29 am

டில்லியில் தேசிய குழந்தைகள் தின விழா மற்றும் தேசிய ஒருமைப்பாடு பாரம்பரிய கலை விழா நடந்தது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். கிரியேட்டிவ் இந்தியா என்னும் தலைப்பில் பாரம்பரிய கலை நிகழ்ச்சி பால பவன் திறந்த வெளி அரங்கில் நடந்தது.

இதில் இராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி குழந்தைகள் தங்கள் மாவட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சி நடத்தினர். இராமநாதபுரம் சவகர் சிறுவர் மன்ற திட்ட ஒருங்கிணைப்பாளரும், சிலம்பம் பயிற்றுநருமான லோக சுப்ரமணியன் தலைமையில் ராமநாதபுரம் நேஷனல் அகாடமி மெட்ரிக்., மேல்நிலைப் பள்ளி 8ஆம் மாணவி ஹாரிணி, செய்யது அம்மாள் மேல்நிலைப் பள்ளி 7ஆம் மாணவி தேவயாலி, தர்மதாவள விநாயகர் மேல்நிலைப் பள்ளி 9 ஆம் வகுப்பு மாணவர் ஆகாஷ், சக்காக்கோட்டை அமிர்தா வித்யாலயா 5 ஆம் வகுப்பு மாணவி ரேஷ்மா ஸ்ரீ ஆகியோர் பெரிய கட்டை கால் சிலம்பாட்டம் ஆடி பார்வையாளர்களை கவர்ந்தனர். இவர்களை மத்திய மனித வள அமைச்சக செயலாளர் ரீனா ஸ்ரீ மற்றும் சிபிஎஸ்இ சங்கதன் அதிகாரிகள் பாராட்டினர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!