18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » குழந்தைகள் தின விழா..

குழந்தைகள் தின விழா..

எழுதியவர்: ஆசிரியர் November 14, 2018, 4:24 pm

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் ஆக்கிடா வலசை ஆரம்பப் பள்ளியில் குழந்தைகள் தின விழா நடந்தது. தலைமை ஆசிரியர் கோமகன் தலைமை வகித்தார். ஜவஹர்லால் நேரு படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. கட்டுரை போட்டிகளில் பி.ஹரிதா ஷினி, மு.மகா ஸ்ரீ, கி.முகிலா ஆகியோர் பரிசு வென்றனர். கிராமத் தலைவர் ரவி, கிராமக் கல்வி குழு தலைவர் மலை ராஜன், பள்ளி மேலாண் குழு தலைவர் நம்புலட்சுமி, துணை தலைவர் வெங்கடேஸ்வரி, சத்துணவு அமைப்பாளர் தங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆசிரியர் திருமேனி நாயகம் ஏற்பாடு செய்தார்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!