17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மண்டபம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் டெங்கு , பன்றி காய்ச்சல் விழிப்புணர்வு முகாம்..

மண்டபம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் டெங்கு , பன்றி காய்ச்சல் விழிப்புணர்வு முகாம்..

எழுதியவர்: ஆசிரியர் November 10, 2018, 10:02 pm

இராமநாதபுரம் மாவட்டம் திமுக மருத்துவ அணி மற்றும் மண்டபம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் டெங்கு காய்ச்சல் மற்றும் பன்றி காய்ச்சல் விழிப்புணர்வு இலவச மருத்துவ முகாம் வெள்ளரிஓடையில் நடந்தது. மாவட்ட திமுக பொறுப்பாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமை வைத்தார் மண்டபம் மேற்கு ஒன்றிய செயலர் ஜீவானந்தம் வரவேற்றார். மாநில மருத்துவ அணி துணை செயலாளர் சரவணன் துவக்கி வைத்தார்.

மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் ஆசிக் அமீன் தலைமையில் டாக்டர்கள் குமார் , நிரோஷா உள்ளிட்ட மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். இந்த முகாமில் இராமநாதபுரம் மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் இன்பா ரகு, ராமேஸ்வரம் நகர் பொறுப்பாளர் நாசர் கான், வெள்ளரிஓடை ஊராட்சி செயலர் குப்பைபிச்சை, மண்டபம் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் சந்திரசேகர், மண்டபம் பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர்கள் ராஜகோபால், முபாரக், மெளலா மைதீன், மூத்த உறுப்பினர்கள் அப்துல்காதர், சக்திவேல், சகுபர் சாதிக் உள்பட பலர் பங்கேற்றனர். இந்த முகாமில் வெள்ளரி ஓடை, தாமரைக்குளம், கோரவள்ளி ஊராட்சி பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனை, மருந்து, மாத்திரை வழங்கப்பட்டது.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!