திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் கவியரசு கண்ணதாசன் இலக்கிய மன்றம் சார்பில் முன்னாள் ஜனாதிபதி மறைந்த ஏபிஜே அப்துல்கலாம் பற்றிய கவிதைபோட்டி நடைபெற்றது. இதில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவு கல்லூரி பேராசிரியரும், NSS திட்ட அலுவலருமான முனைவர். போ.பால்பாண்டியன் கவிதை பரிசுக்குரியதாக தேர்வு செய்யப்பட்டு டாக்டர் அப்துல் கலாம் விருது வழங்கப்பட்டது. அப்துல்கலாம் பேரன் ஷேக்சலீம் விருது வழங்கினார்.
செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.பசும்பொன் தேவர் கல்லூரி என் எஸ் எஸ் அலுவலருக்கு கலாம் விருது …
எழுதியவர்: ஆசிரியர் November 10, 2018, 9:55 pm




You must be logged in to post a comment.