17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » உலக சிக்கன தின போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு..

உலக சிக்கன தின போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு..

எழுதியவர்: ஆசிரியர் November 10, 2018, 3:30 am

உலக சிக்கன தினத்தை முன்னிட்டு சிறுசேமிப்பு துறை சார்பில் பேச்சு, கட்டுரை , நாடகம் , நடன போட்டிகள் நடந்தன. கட்டுரை போட்டியில்  உத்தரகோசமங்கை அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ்-1 மாணவி பூ.ஷாலினி முதல் பரிசு, பரமக்குடி டான் பாஸ்கோ மேல்நிலைப்பள்ளி 10 ஆம் வகுப்பு மாணவி ச. வைஷ்ணவி 2 ஆம் பரிசு, கீழக்கரை ஹமீதியா பெண்கள் மேல்நிலைப் பள்ளி 10 ஆம் வகுப்பு மாணவி மாதிஹா 3ஆம் பரிசு, இராமநாதபுரம் புனித அந்திரேயா பெண்கள் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவி ஷாகிரா பேகம் 4 ஆம் பரிசு பெற்றனர்.

பேச்சுப் போட்டி : உத்திர கோசமங்கை அரசு மேல்நிலைப் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவர் கே.செந்தில் பாலன் முதல் பரிசு, கீழக்கரை ஹமீதியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி பிளஸ்-1 மாணவி எஸ். நிலோபர் நிஷா 2 ஆம் பரிசு, தொண்டி அல் ஹிலால் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவி அக்சீலா 3 ஆம் பரிசு பெற்றனர்.

நடன போட்டி : பரமக்குடி டான் பாஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி எட்டாம் வகுப்பு மாணவிகள் ஹ. அபர்ணா ரா.கிருத்திகா, ம. தேவிகிருபா, வ.ஷிவானி , ஏழாம் வகுப்பு மாணவி ஜெ. அக்சயா குழுவினர் முதல் பரிசு, ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினி அம்பாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 1 மாணவிகள் எஸ்.அபிநயா, ஜி.ரஞ்சனி, ஆர்.கேத்தரின், எம்.கோமதி சங்கரி 2 ஆம் பரிசு பெற்றனர்.

நாடகப் போட்டி : முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவி கே.முத்துலட்சுமி, ஆறாம் வகுப்பு மாணவி வீரமூர்த்தி, ஏழாம் வகுப்பு மாணவிகள் உமா, சாலினி, ஒன்பதாம் வகுப்பு மாணவர் அருள்ராஜ், ஆறாம் வகுப்பு மாணவி சிவ சந்தியா, ஒன்பதாம் வகுப்பு மாணவர் ராம் பிரபு குழுவினர் முதல் பரிசு, கீழக்கரை மக்தூமியா மேல்நிலைப் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவி ஆர். முனி ஜிவினி, ஏழாம் வகுப்பு மாணவிகள் வி.முத்து பிரியா, பி.பரமேஸ்வரி, எட்டாம் வகுப்பு மாணவிகள் ஆர்.ஹர்ஷினி, என்.அல்ஷாஃபா, ஏழாம் வகுப்பு மாணவர் கே.முகமது பர்ஹான் குழுவினர் 2 ஆம் பரிசு, சின்ன ஏர்வாடி நடுநிலைப் பள்ளி ஆறாம் வகுப்பு மாணவர்கள் முகேஷ், வர்ஷினி, நித்யா, யமுனா, ஏழாம் வகுப்பு மாணவிகள் ஷோபனா, சத்யா குழுவினர் 3 ஆம் பரிசு பெற்றனர். போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் பரிசு வழங்கினார். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சிறுசேமிப்பு ) வீரப்பன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை மற்றும் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.  
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!