17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » கீழக்கரையில் மீனவர் திருக்கை முள்ளால் குத்தி கொலை..

கீழக்கரையில் மீனவர் திருக்கை முள்ளால் குத்தி கொலை..

எழுதியவர்: ஆசிரியர் November 1, 2018, 10:32 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மீனவர்குப்பம் பகுதியை சேர்ந்த குப்பமுத்து மகன் ஆனந்த்(27), இதே பகுதியை சேர்ந்த ராமசாமி மகன் முத்து (24) ஆகிய இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் ஆனந்த் என்பவர் திருக்ககை முள்ளால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கீழக்கரை அரசு மருத்துவமனையில் இவரை பரிசோதித்த டாக்டர் இவர் இறந்துவிட்டதாக உறுதி செய்துள்ளனர். பின்னர்  உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  இது சம்பந்தமாக  கீழக்கரை டிஎஸ்பி முருகேசன் தலைமையிலான காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து  கொலையாளி முத்துவை தேடி வருகின்றனர். மேலும் பலியான ஆனந்திற்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புகைப்படம் :- சன்ரைஸ் – சமூக வலைதளம்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!