17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் அருகே கேஸ் சிலிண்டர் வெடித்து குடிசை சாம்பல்..

இராமநாதபுரம் அருகே கேஸ் சிலிண்டர் வெடித்து குடிசை சாம்பல்..

எழுதியவர்: ஆசிரியர் October 31, 2018, 2:30 pm

இராமநாதபுரம் அருகே லாந்தை கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பாபு. இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பாபு வேலைக்கு சென்று விட்டார். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு, ராஜேஸ்வரி நூறு வேலைக்கு சென்றிருந்தார். இந்நிலையில் பாபு வீட்டில் இருந்த சமையல் காஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு வெடித்தது.

இதில் குடிசை முற்றிலும் எரிந்ததில் வீட்டில் இருந்த 5 பவுன் நகை, ரொக்கம் ரூ.6 ஆயிரம் , இரு சக்கர வாகனம் நாசமானது. தகவல் அடிப்படையில் ராமநாதபுரம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீ மேலும் பரவ விடாமல் தடுத்தனர். மேலும் பாபு வீட்டில் காலியாக இருந்த மற்றொரு சிலிண்டரை மீட்டனர். இது குறித்து இராமநாதபுரம் டவுன் போலீசார் விசாரிக்கின்றன்ர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!