17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மரைக்காயர் பட்டிணத்தில் பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம்..

மரைக்காயர் பட்டிணத்தில் பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம்..

எழுதியவர்: ஆசிரியர் October 31, 2018, 12:56 pm

தமிழகம் முழுவதும் டெங்கு மற்றும் மர்மகாய்ச்சல் பரவி வரும்நிலையில் SDPI கட்சி மாநில தலைமையின் அறிவுறுத்தலின் படி தமிழகம் முழுவதும் SDPI கட்சியின் சார்பில் டெங்கு விழிப்புணர்வு முகாம் மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கும் பணியை SDPIகட்சி செய்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக இராமநாதபுரம் மாவட்டம் மரைக்காயர்பட்டினம் SDPI கட்சியின் சார்பில் டெங்கு விழிப்புணர்வு முகாம் மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி (30/10/2018) நடைபெற்றது. நகர் தலைவர் செய்யது அலி தலைமை வகித்தார். பள்ளி மாணவர்கள், பெண்கள், குழந்தைகள் உள்பட அனைவருக்கும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மரைக்காயர்பட்டினம் SDPI -கட்சி நிர்வாகிகள்,செயல்வீரகள், மரைக்காயர் பட்டினம் துவக்கப் பள்ளி மாணவர்கள், தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன், ஆசிரியர் பாலசுப்ரமணியன் கலந்து கொண்டனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!