17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » பசும்பொன்னில் தேவர் குரு பூஜை தொடக்கம்..

பசும்பொன்னில் தேவர் குரு பூஜை தொடக்கம்..

எழுதியவர்: ஆசிரியர் October 29, 2018, 4:29 pm

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் முன்னிலையில், தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்திமீனாள் நடராஜன் தலைமையில் லட்சார்ச் சனையுடன் தேவர் குருபூஜை தொடங்கியது. இதைமுன்னிட்டு நினைவிடத்தில் உள்ள விநாயகர் சிலை, தேவர் சிலைக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடத்தப்பட்டு, பொங்கல் வைத்து முதல் நாள் நிகழ்ச்சி தொடங்கியது. எஸ்.தங்கவேல், ராமச்ந்திரன், பசும்பொன் கிராம மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதனையடுத்து கமுதி மற்றும் பசும்பொன் கிராமத்தை சுற்றியுளள்ள 200 க்கும் மேற்பட்ட கிரமாங்களில் இருந்து பொதுமக்கள், பொண்கள் பால் குடம் எடுத்து கமுதி தேவர் சிலை, மருதுபாண்டியர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பின்னர் ஊர்வலமாக பசும்பொன்னுக்கு சென்று தேவர் சிலைக்கு அபிஷேகம் செய்தனர். கமுதி சிலைக்கு முன் அரசு ஊழியர்கள், மூவேந்தர் பண்பாட்டுக்கழக நிர்வாகிகள் சார்பில் பொங்கல் வைத்து வழிபட்டு, தேவர்சிலை மற்றும் மருதிபாண்டியர் சிலைகளுக்கு ஊர்வலமாக சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!