17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » திண்டுக்கல் சின்னாளப்பட்டியில் மாற்றுதிறனாளிகளுக்கான தன்னம்பிக்கை பயிற்சி முகாம்..

திண்டுக்கல் சின்னாளப்பட்டியில் மாற்றுதிறனாளிகளுக்கான தன்னம்பிக்கை பயிற்சி முகாம்..

எழுதியவர்: ஆசிரியர் October 28, 2018, 7:15 pm

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியில் இன்று (28.10.2018) தமிழக மாற்றுத்திறனாளிகள் உரிமை மீட்பு சங்கத்தின் சார்பில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்த கிராமப்புற மாற்றுத்திறனாளிகளின் தன்னம்பிக்கை பயிற்சி முகாம், தொழில் சார்ந்த வழிகாட்டல் மற்றும் அரசின் நலத்திட்டங்களை பெறுதல் குறித்த வழிகாட்டல் முகாம் ஆகியவை அடங்கிய ஒருங்கிணைந்த கூட்டம் தமிழக மாற்றுத்திறனாளிகள் உரிமை மீட்பு சங்கத்தின் மாவட்டத் தலைவர் திரு.மணிகண்டன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இம்முகாமில் தமிழ் மாநிலத் தலைவர் திரு.அப்துல் மாலிக், மாநில செயலாளர் திரு. முகமது அனஸ் (வழக்கறிஞர்), மாநில பொருளாளர் திரு.கோபிநாத் மற்றும் மாநில துணைத் தலைவர் திரு.முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல் .
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!