18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » சேலம் போதிமரம் முதியோர் இல்லம் சார்பில் உலக முதியோர் தின விழா…

சேலம் போதிமரம் முதியோர் இல்லம் சார்பில் உலக முதியோர் தின விழா…

எழுதியவர்: ஆசிரியர் October 28, 2018, 12:01 pm

சேலம் போதிமரம் சமூக ஆர்வலர்கள் சார்பில் உலக முதியோர் தின விழா சேலம் சட்டக்கல்லூரி அருகில் அமைந்துள்ள போதிமரம் முதியோர் இல்லத்தில் மாவட்ட ஆட்சியர் ரோகிணி,I.A.S தலைமையில் 27/10/18 அன்று சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில் அனைத்து அரசுத்துறை அதிகாரிகள்,சமூக நல அமைப்பின் பிரதிநிதிகள்,பள்ளி மாணவ மாணவிகள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள், ஊடகநண்பர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இவ்விழாவில் முதியோர்கள் கௌரவிக்கப்பட்டனர். போதிமரம் முதியோர் இல்ல சமூக ஆர்வலர்களுக்கு விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மேலும் முதியோர் தினவிழாவில் கலந்து தலைமையேற்று சிறப்பித்த சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் ரோகிணி I.A.S அவர்களுக்கும், சமூக நல துறை மற்றும் அனைத்து அரசு அதிகாரிகளுக்கும், காவல்துறையினர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும், பல்வேறு சமூக அமைப்புகளுக்கும், பள்ளி நிர்வாகத்திற்கும், மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், மூத்தோர்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் மற்றும் பொது மக்களுக்கும் போதிமரம் முதியோர் இல்லம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டு இனிதே விழா நிறைவுற்றது.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!