18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » கீழக்கரையில் தொடரும் நிலவேம்பு கசாயம் விநியோகம்..

கீழக்கரையில் தொடரும் நிலவேம்பு கசாயம் விநியோகம்..

எழுதியவர்: ஆசிரியர் October 28, 2018, 11:50 am

கீழக்கரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெற்கு கிளை சார்பில் நிலவேம்பு குடிநீர் தயார் செய்து கீழக்கரையின் பல பகுதிகளில் வழங்கப்பட்டது.

தற்போது கீழக்கரை நகர் முழுவதும் டெங்கு மற்றும் விஷக் காய்ச்சல் பரவுவதை தடுக்கின்ற விதத்தில் 9 மூலிகைகள் உள்ளடங்கிய நில வேம்பு கசாயம் தயார் செய்து புதுத்தெரு, பருத்திகார தெரு, ஜாமியா நகர் சொக்கம்பட்டி, ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்று ஏராளமான மக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டதுடன் டெங்கு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரமும் வழங்கப்பட்டது.

மேலும் இது குறித்து கிளை தலைவர் பதுருசமான் அவர்கள் கூறுகையில், “கீழக்கரையை ஏழு பகுதியாக பிரித்து அனைத்து பகுதியிலும் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் வாரம் தோறும் நிலவேம்பு கசாயம் தயார் செய்து கீழக்கரை நகர் முழுவதும் வினியோகிக் முடிவு செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!