18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் அருகே 1 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டை பறிமுதல் ..

வேலூர் அருகே 1 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டை பறிமுதல் ..

எழுதியவர்: ஆசிரியர் October 27, 2018, 11:50 am

வேலூர் அருகே கே.ஜி.கண்டிகை விவசாய நிலையத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. சோளிங்கர் அருகே கே.ஜி-கண்டிகை கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்துள்ளதாக ஆற்காடு வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. வேலூர் வனப்பாதுகாப்பு மாவட்ட அலுவலர் பார்கவே தேகா மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று ஆய்வு செய்தனர்.

கரும்பு தோட்டம் மற்றும் மாந்தோப்பு பகுதியில் பிளாஸ்டிக் தார்பாய் போட்டு மூடி மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் ரூ 1 கோடி மதிப்பிலான 1,250 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

வேலூர் மாவட்ட செய்தியாளர்:-கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!