17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரத்தில் காருக்கு தீ வைத்த தனியார் நிதி நிறுவன மேலாளர் கைது ..

இராமநாதபுரத்தில் காருக்கு தீ வைத்த தனியார் நிதி நிறுவன மேலாளர் கைது ..

எழுதியவர்: ஆசிரியர் October 24, 2018, 8:06 pm

இராமநாதபுரத்தில் தனியார் நிதி நிறுவனத்திற்கு சொந்தமான காரை தீ வைத்து கொளுத்திய பணிநீக்கம் செய்யப்பட்ட தனியார் நிதி நிறுவன மேலாளரை போலீசார் கைது செய்தனர்.

இராமநாதபுரம் சாயக்காரத் தெருவில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கும் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவன வட்டார மேலாளராக ராமநாதபுரம் மாரியம்மன் கோயில் தெரு செல்லத்துரை,40. பணியாற்றினார். நிதி நிறுவனத்தில் முறைகேடுகள் செய்ததாக சமீபத்தில் இவர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிறுவன மண்டல மேலாளர் காசிநாதனுக்கும், செல்லத்துரைக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. இராமநாதபுரம் சாயக்காரத் தெருவில் நிதி நிறுவன வாசலில் நிறுத்தி வைத்திருந்த கார் மீது டீசல் ஊற்றி தீ வைத்ததில் கார் முற்றிலும் நாசமானது. இதன் மதிப்பு ரூ.10 லட்சம். தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இது தொடர்பாக காசிநாதன் புகாரில் செல்லத்துரையை கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் கலையரசன் கைது செய்து விசாரித்து வருகிறார்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!