17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆலங்குளம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையம் அருகே சுகாதாரக் கேடு..

ஆலங்குளம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையம் அருகே சுகாதாரக் கேடு..

எழுதியவர்: ஆசிரியர் October 24, 2018, 4:48 pm

ஆலங்குளம் சிறப்புநிலை பேரூராட்சி 14வதுவார்டில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையம் உள்ளது. இந்த மையத்தில் சுமார் 20குழந்தைகள் இருக்கிறார்கள்.

இந்த மையத்திற்கு பின்புறம் சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இங்கு இருக்கும் குழந்தைகளுக்கு பெரும் சுகாதாரக்கேடு ஏற்படும் ஆபத்து உள்ளது. மேலும் மையத்தை சுற்றி குப்பை கூளங்களும் அதிகமாக காணப்படுகிறது.

மையத்தின் முன்பாக மழைநீர் தேங்கி நிற்கும் அவல நிலை. எனவே இந்த சுகாதாரக் கேடுகளை சரி செய்ய உடனே நடவடிக்கை எடுக்குமாறு பொதுநலன் கருதி மக்கள் வழிகாட்டி இயக்கம் சார்பில் மாவட்ட ஆட்சியருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

செய்தியாளர்:-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!