17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டைஎத்திலோடு ஊராட்சியில் குடிநீர் குழாய்கள் அமைக்க கோரிக்கை மனு..

நிலக்கோட்டைஎத்திலோடு ஊராட்சியில் குடிநீர் குழாய்கள் அமைக்க கோரிக்கை மனு..

எழுதியவர்: ஆசிரியர் October 24, 2018, 12:31 pm

நிலக்கோட்டை தாலுகா எத்திலோடு ஊராட்சி புல்லக்காடு பட்டியில் குடிநீர் குழாய்கள் அமைத்து தர வேண்டி அகில இந்திய இளைஞர் வளர்ச்சி சங்கம் சார்பாக மனு.

புல்லக்காடு பட்டியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்,இவ்வளவு மக்களுக்கும் குடி நீர் தொட்டி ஒரே இடத்தில் அமைந்து இருப்பதால் பொது மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர், ஆகையினால் குடி நீர் குழாய்களை ஒவ்வொரு தெருவிலும் அமைத்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம், என அகில இந்திய இளைஞர் வளர்ச்சி சங்கம் சார்பில் நிலக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இம்மனு அளிக்கும் நிகழ்ச்சியில் அகில இந்திய இளைஞர் வளர்ச்சி சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட தலைவர் ஜெ. அஸ்கர்,மாவட்ட செயலாளர் விவேக்,நிலக்கோட்டை ஒன்றிய தலைவர் சதீஷ் கனி சன்முகவேல் கௌதம் மற்றும் சங்கர் கணேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல் .

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!