17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » அக்டோபர் 30 குருபூஜையை ஒட்டி பாதுகாப்பு பணியில் 8ஆயிரம் போலீசார்..

அக்டோபர் 30 குருபூஜையை ஒட்டி பாதுகாப்பு பணியில் 8ஆயிரம் போலீசார்..

எழுதியவர்: ஆசிரியர் October 24, 2018, 4:39 am

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் 111வதுஜெயந்தி, 56வது குருபூஜை அக்.30 இல் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது.

அங்கு தற்போது மேற்கொள்ளபட்டுள்ள பணிகளை மாவட்ட ஆட்சியர் கொ வீரராகவ ராவ் இன்று ஆய்வு செய்தார். அவர் கூறுகையில் “அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள் வந்து வழித்தடங்கள், எவ்வித சிரமமின்றி பொதுமக்கள் செல்லும் பாதையை பார்வையிட்டோம். பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தொய்வின்றி நிறைவேற்ற வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுத்தப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். முக்கிய இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது” என்றார்.

ஊராட்சிகள் உதவி இயக்குனர் செல்லத்துரை, கமுதி காவல் துணை கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம், பொதுப்பணி துறை (கட்டுமானம் ) செயற்பொறியாளர் குரு திவேல் மாறன், தாசில்தார் சிக்கந்தர் பபிதா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!