17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாம்பன் பாலம் ஸ்திர தன்மை ஆய்வு – விரைவில் நாடு முழுவதும் மின்மயம் ஆகும் ரயில் பாதை..

பாம்பன் பாலம் ஸ்திர தன்மை ஆய்வு – விரைவில் நாடு முழுவதும் மின்மயம் ஆகும் ரயில் பாதை..

எழுதியவர்: ஆசிரியர் October 21, 2018, 4:37 pm

பாம்பன் பாலத்தின் ஸ்திர தன்மை, பழைய தூக்கு பாலத்திற்கு மாற்றாக புதிய பாலம் அமைத்தல் குறித்து ஆய்வு செய்ப ரயில்வே போர்டு கமிட்டி உறுப்பினர் கான் ஷ்யாம் சிங் இன்று பாம்பன் வந்தார். ஆய்வுக்கு பிறகு அவர் கூறுகையில்: இந்தியா முழுவதும் உள்ள ரயில் பாதைகள் பசுமை போக்குவரத்து திட்டத்தின் கீழ் 13 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பில் மின் மயமாக்கப்பட உள்ளது.

இதில் ரூ.80 முதல் 90 கோடி மதிப்பில் ராமேஸ்வரம் – மதுரை ரயில் பாதை மின்மயக்க திட்டமிடப்பட்டுள்ளது. பாம்பன் தூக்கு பாலம் போதிய உயரம் இல்லாததால் புதிய பாலம் அமைக்கப்பட்டு மின் பாதை அமைக்கவுள்ளோம் என்றார்.

பாம்பன் பாலத்தை ரயில்வே வாரிய குழு உறுப்பினர் கான் ஷ்யாம் சிங் மற்றும் தொழில்நுட்ப பொறியாளர்கள் ஆய்வு செய்தனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.  
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!