17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் விபத்து மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி!..

நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் விபத்து மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி!..

எழுதியவர்: ஆசிரியர் October 20, 2018, 8:32 pm

கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மேற்கு மாவட்டம் சார்பில் விபத்து மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி சனிக்கிழமை (19/10/2018) மாலை 4மணியளவில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி முன்பு தொடங்கியது

இப்பேரணிக்கு அமைப்பின் மாவட்ட தலைவர் ஜலாலுத்தீன் தலைமை வகித்தார், மாவட்டசெயலாளர் சுலைமான், பொருளாளர் செய்யது மசூது மற்றும் மாவட்ட நிர்வாகிகள் அப்துல்காதர், அஹ்மது, செய்யதுஅலி ,மீரான்கனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கடையநல்லூர் தாசில்தார் தங்கராஜ் பேரணியை கொடியசைத்து துவக்கிவைத்து பேசியதாவது, “போதை பொருள் பழக்கத்தால் ஏற்படும் உடல் பாதிப்புகள், சமுதாயத்தில் அதன் தாக்கம், குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகள் குறித்து அவர்கள் எடுத்துரைத்தால்.

பின்னர் இப்பேரணி நகரின் முக்கிய வீதியான ரயிவே பீட்டர்சாலை, மெயின் ரோடு, மாவடிக்கால் , பஜார்ரோடு வழியாக சென்று இறுதியில் காயிதே மில்லத் திடலில் முடிவடைந்தது. இந்த பேரணியில் அனைத்து கிளை நிர்வாகிகள் குறிச்சி சுலைமான், அப்துல்ஜப்பார், மைதீன், அப்துல்காதர், பாரூக், சிராஜ், அப்துல்லாஹ் மற்றும் மதரஸா மாணவ மாணவிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இறுதியில் மாவட்ட துணைசெயலாளர் அய்யூப்கான் நன்றி கூறினார்.

செய்தி: அ.சா.அலாவுதீன்.மூத்த நிருபர் ( பூதக்கண்ணாடி மாத இதழ்)- கீழை நியூஸ்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!