18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் கிராமப்புற வாலிபால் போட்டி ..

இராமநாதபுரம் கிராமப்புற வாலிபால் போட்டி ..

எழுதியவர்: ஆசிரியர் October 20, 2018, 2:20 pm

கிராம புறங்களில்  விளையாட்டு, கொண்டாட்டம், முன்னேற்றம் ஆகியன குறித்து ஈஷா கிராம புத்துணர்வு இயக்கம் விழிப்புணர்வு ஏற்படுத்த 14 வது ஈஷா கிராமிய திருவிழா நடத்த திட்டமிட்டுள்ளது.  இதன்படி ராமநாதபுரம் மாவட்ட அளவிலான கிராமப்புற வீரர்களுக்கான வாலிபால் போட்டி 2018 சீதக்காதி – சேதுபதி விளையாட்டு அரங்கில் இன்று துவங்கியது.

இப்போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 20 அணிகள் கலந்து கொண்டன. ராம்கோ விற்பனை மேலாளர் ஜெகன் தொடங்கி வைத்தார். இதில் வெற்றி பெறும் அணி மதுரையில் நடைபெறவுள்ள மண்டல அளவிலான போட்டியில் வென்று ஈஷா மைய நிறுவனர் சத்குரு தலைமையில் டிச.9 இல் ஈரோட்டில் நடக்கும் இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படுகிறது. போட்டி எற்பாடுகளை ஈஷா யோகா மைய ஒருங்கிணைப்பாளர்கள் ஞானசேகரன், சிலம்பு செல்வன், பாலமுருகன், ஜெயராமன் செய்தனர். உடற்கல்வி ஆசிரியர்கள் ரமேஷ்பாபு, ரமேஷ், சந்திரசேகர், திகைரன், ராஜன் ஆகியோர் நடுவர்களாக பணியாற்றுகின்றனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!