18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » அவதூறு பரப்பும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை – கீழக்கரை காவல்துறை கடும் எச்சரிக்கை ..

அவதூறு பரப்பும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை – கீழக்கரை காவல்துறை கடும் எச்சரிக்கை ..

எழுதியவர்: ஆசிரியர் October 19, 2018, 12:30 am

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதிகளில் மதமோதல்களை உருவாக்குவது போல் சுவரொட்டிகள் ஒட்டுவதும், சமூக வலைதளம் மூலமாக அவதூறு பரப்புவதும், பெண்களை தவறாக சித்தரித்து படங்களை வெளியிடுவது, பெண்களிடம் போலி முகவரியில் உள்ள போன் மூலமாக ஆபாசமாக பேசுவது, பள்ளி, கல்லூரி செல்லும் பெண்களிடம் கேலி செய்வது இதுபோன்ற சர்ச்சைக்குரிய விசயங்களில் ஈடுபடுவது தொடர்ந்து காவல்நிலையத்திற்கு புகார் வந்தவண்ணம் உள்ளது.

இதுபற்றி இன்ஸ்பெக்டர் முத்துமீனாட்சி கூறுகையில், அமைதி நிலவும் கீழக்கரையில் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கத்துடன் சிலர் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது. அவர்களை கண்டறிந்து அவர்கள் மீது விரைவில்  கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக வந்து புகார் அளிக்கலாம் அவர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும் என்றார்.

செய்தி: அ.சா.அலாவுதீன்.மூத்த நிருபர் ( பூதக்கண்ணாடி மாத இதழ்)- கீழை நியூஸ்  
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!