17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » பெரியகுளம் நகராட்சியில் அசுத்தமான பிராணிகளை நீக்கும் நடவடிக்கை..

பெரியகுளம் நகராட்சியில் அசுத்தமான பிராணிகளை நீக்கும் நடவடிக்கை..

எழுதியவர்: ஆசிரியர் October 18, 2018, 12:25 am

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் முறையான பராமரிப்பு இன்றி, பொதுமக்களுக்கு தொற்றுநோய் ஏற்படுத்தும் வகையில் சுற்றித் திரிந்த சுமார் 50 பன்றிகளை மாவட்ட ஆட்சியர், மற்றும் பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் அவர்களின் அறிவுறுத்தலின் படி, பெரியகுளம் நகராட்சி ஆணையாளர் (பொ) அவர்களின் உத்தரவின்படி அகற்றும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

இப்பணி பெரியகுளம் நகராட்சி நிர்வாகம் சார்பில் நகர்நல அலுவலர் Dr. தினேஷ் குமார் MD மற்றும் நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் அறிவுறுத்தின் படி, நகராட்சி ஊழியர்கள் மற்றும் திருநெல்வேலியில் இயங்கி வரும் “மாசு அறக்கட்டளை” யின் துணை கொண்டு பொதுமக்களுக்கு தொற்று நோய் ஏற்படுத்தாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, முறையான பராமரிப்பில்லாமல் சுற்றித் திரிந்த பன்றிகளை பிடித்தனர். பின்னர் பிடிக்கப்பட்ட பன்றிகள் ஆட்சியர் அறிவுறுத்தலின் படி மாசு அறக்கட்டளையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

செய்தி A.சாதிக் பாட்சா, நிருபர்.தேனி மாவட்டம்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!