18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தேவர் ஜெயந்தி, குரு பூஜை பசும்பொன்னில் கலெக்டர், போலீஸ் அதிகாரிகள் ஆய்வு..

தேவர் ஜெயந்தி, குரு பூஜை பசும்பொன்னில் கலெக்டர், போலீஸ் அதிகாரிகள் ஆய்வு..

எழுதியவர்: ஆசிரியர் October 16, 2018, 10:19 pm

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் தேவர் நினைவிடத்தில் அக்.30இல் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 111-வது ஜெயந்தி, 56-வது குரு பூஜை கொண்டாடப்படுகிறது.அங்கு பாதுகாப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் தலைமையில். தென் மண்டல காவல் துறை தலைவர் கே.பி.சண்முக ராஜேஸ்வரன், இராமநாதபுரம் சரக காவல் துறை துணைத் தலைவர் காமினி, காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா இன்று (அக்.16) ஆய்வு செய்தனர்.

இவ்விழாவில் அஞ்சலி செலுத்த மிக முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள் , தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு, அடிப்படை வசதிகள் குறித்து களஆய்வு நடத்தினர்.

மேலும் அவசர கால சூழ்நிலைகளை எதிர்கொள்ள மருத்துவக்குழுக்கள், ஆம்புலன்ஸ், தீயணைப்பு, காவல் அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!