18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மின்சார வாரியம் தொடர்பாக இராமநாதபுரம் நுகர்வோர் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பாக குறை தீர்ப்பு கூட்டம்…

மின்சார வாரியம் தொடர்பாக இராமநாதபுரம் நுகர்வோர் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பாக குறை தீர்ப்பு கூட்டம்…

எழுதியவர்: ஆசிரியர் October 16, 2018, 10:12 pm

இராமநாதபுரம் நுகர்வோர் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பாக மின்சார வாரியம் சம்பந்தமாக நடந்த குறை தீர்ப்பு கூட்டத்தில் கீழக்கரை சார்பாக மக்கள் டீம் காதர் மற்றும் செய்யது இபுறாகீம் ஆகியோர் கலந்து கொண்டு கீழக்கரையின் மின்சார வாரியம் சம்பந்தமான பிரதான குறைகளை எடுத்து வைத்தனர்.

இக்கூட்டத்தில் கீழக்கரை பிரதான பிரச்சிறைகளான  புகார் குறித்த தகவல் தர நிரந்தர தொலை பேசி எண், அவசர கால உதவி, துணைமின் நிலையத்தில் குடிநீர் தேவை,  புதிய பேரூந்து நிலையத்தில் உபயோகத்தில் இல்லாமல் இருக்கும் மின்சார கட்டணம் செலுத்தும் வசதியை மீண்டும் ஏற்படுத்தி தருதல். நகருக்குள் செம்பு கம்பி மாற்ற வேண்டிய பணிகளை துரிதபடுத்துதல். ஆள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்தல் போன்ற கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு பொறியாளர் ஆறுமுக ராஜ் தலைமையிலும், மின்சார அலுவலக அதிகாரி கங்காதரன் முன்னிலையிலும் நடைபெற்றது.

தகவல்:- மக்கள் டீம்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!