17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில். இடியுடன் மழை. மின்னல் தாக்கி வாலிபர் பலி …

பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில். இடியுடன் மழை. மின்னல் தாக்கி வாலிபர் பலி …

எழுதியவர்: ஆசிரியர் October 16, 2018, 9:48 pm

பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள கள்ளீயூர் பகுதியை சார்ந்த சந்திரன் மகன் சரவணன் வயது 23 என்பவர் தனது இரு சக்கர வாகனத்தில் தென்கரை கோட்டைக்கு சென்ற போது இடியுடன் மழை பெய்ததால் கொட்டாயூர் என்ற இடத்தில் சாலை ஓர புளிய மரத்து அடியில் ஒதுங்கிதுள்ளார்.

அப்போழுது மின்னல் தாக்கியதில் அதே இடத்தில் சுருண்டு விழந்து பலி ஆகியுள்ளார். மேலும் இவ்விபத்தில் இறந்து போன வாலிபருக்கு திருமணமாகவில்லை. இவர் கூலி தொழிலாளியும் ஆவார்.

இது சம்பந்தமாக கோபிநாதம்பட்டி போலீசார்  வழக்கு பதிவு செய்து  விசாரித்து வருகின்றனர். இவர்  நேற்று இரவு தான் கேரளாவில் இருந்து கிள்ளியூர் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 செய்தியாளர்:- கே.எம்.வாரியார், வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!