18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கமுதி பசும்பொன் தேவர் கல்லூரியில் இரத்த தான முகாம்..

கமுதி பசும்பொன் தேவர் கல்லூரியில் இரத்த தான முகாம்..

எழுதியவர்: ஆசிரியர் October 16, 2018, 10:41 am

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி பசும்பொன் உ முத்துராமலிங்க தேவர் நினைவு கலை, அறிவியல் கல்லுரியில் 111வது தேவர் ஜெயந்தி, 56 வது குருபூஜையையொட்டி நாட்டுநலப்பணி திட்டம் , .மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை ரத்த வங்கி, இராமநாதபுரம் நேரு யுவ கேந்திரா, யூத் ரெட் கிராஸ், செஞ்சுருள் சங்கம், கமுதி லயன்ஸ் கிளப் ஆகியோர் இணைந்து ரத்த தான முகாம் நடத்தினர்.

இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் வே.அருணாச்சலம், நாரணாயபுரம் ஊராட்சி முன்னாள் தலைவர் ராமச்சந்திரபூபதி, கமுதி லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் சண்முகராஜ், பாண்டியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் கல்லூரி மாணவர்கள், மாணவிகள், பொதுமக்கள், பேராசியர்கள் ஆகியோர் கலந்து கொண்டு 200 க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் வழங்கினர். மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை டாக்டர் சங்கீதா , மேலாளார் ரவி, பேராசிரியர் அழகுமலை, நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பேராசிரியர் போ.பால்பாண்டியன், யூத் ரெட் கிராஸ் வாகை பாண்டியன், செஞ்சுருள் சங்கம் பேராசிரியர் செயக்காளை, கமுதி நேரு யுவ கேந்திர ஒருங்கிணைப்பாளர் மு.வெள்ளைப்பாண்டியன் ஆகியோர் செய்திருந்தனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!