18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » கமுதியில் இலவச மருத்துவ முகாம்..

கமுதியில் இலவச மருத்துவ முகாம்..

எழுதியவர்: ஆசிரியர் October 15, 2018, 9:26 pm

இராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் பள்ளிவாசல் டிரஸ்ட், மதுரை ப்ளூ மாடர்ன் மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.  கமுதி கலாவிருத்தி பள்ளி தாளாளர் ஹாஜி.என். அப்துல்காதர் தலைமை வகித்தார். பள்ளிவாசல் டிரஸ்டி முகமது மீரா முன்னிலை வகித்தார்.

இம்முகாமில் ரத்தநாள சிகிச்சை, கால் நரம்பு முடிச்சுகள், சக்கரை நோயாளிகளுக்கு பாத புண்கள், நோய் தீவிர தன்மை கண்டறிதல், கர்ப்பபை, பித்தப்பை, உடல் பருமன், தைராய்டு, சிறுநீரக கோளாறுகள், கல் அடைப்பு, குழந்தையின்மை ஹர்னியா, குடல் வால் நோய்களுக்கு மதுரை ப்ளு மாடர்ன் மருத்துவமனை டாக்டர்கள் பிரகாஷ், மகேஸ்வரன், தேவகி, வித்யா சிகிச்சை அளித்தனர். கமுதி வட்டார மக்கள் பங்கேற்று பயனடைந்தனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!