18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தேவிப்பட்டினம் பகுதியில் கடல் அட்டையுடன் ஒருவர் சிக்கினார்..

தேவிப்பட்டினம் பகுதியில் கடல் அட்டையுடன் ஒருவர் சிக்கினார்..

எழுதியவர்: ஆசிரியர் October 15, 2018, 12:39 am

இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் கடல் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கிடமாக இருவர் நின்றனர், அவர்களை விசாரணைக்கு போலீசார் அழைத்தபோது ஒருவர் தப்பி ஓடினர். ஆனால் அதே விபட்டினம் பெரிய கடைவீதி ஷாகுல் ஹமீது மகன் முகைதீன் 36 என்பவர் கடல் அட்டைகளுடன் சிக்கினார்.

பின்னர் அவரிடமிருந்து இறந்த நிலையில் 49 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இராமநாதபுரம் வன உயிரின சரக அலுவலகத்தில் முகைதீனை போலீசார் ஒப்படைத்தனர். தப்பி ஓடிய ராவுத்தர் நயினா முகமதுவை தேடி வருகின்றனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!