17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » வில் மெடல்ஸ் மற்றும் கலாம் இயக்கத்தினர் இணைந்து நடத்திய சாதனை நிகழ்வுகள்…

வில் மெடல்ஸ் மற்றும் கலாம் இயக்கத்தினர் இணைந்து நடத்திய சாதனை நிகழ்வுகள்…

எழுதியவர்: ஆசிரியர் October 13, 2018, 2:44 am

நேற்று வெள்ளிக்கிழமை 12.10.2018 இராமநாதபுரத்தில் அமைந்துள்ள புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கலாம் இயக்கத்தினர் நிகழ்த்திய வில் ஸ்டேட் ரெக்கார்ட் நிகழ்வு நடைபெற்றது.

இந்த சாதனை நிகழ்வில் 645 மாணவ மாணவியர் அப்துல் கலாமின் பொண் மொழிகளையும்,  எண்ணங்களையும் ஆளுக்கொன்றாக மேடையில் பதிவு செய்தனர். 44 நிமிடங்களில் அம்மாணவ மாணவியர் இச்சாதனையை நிகழ்த்தினார். இந்த சாதனை நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கலாம் நண்பர்கள் இயக்கத்தினர் செய்திருந்தனர். அப்பள்ளி மாணவ, மாணவியர் தங்களின் சிறப்பான ஒத்துழைப்பை சாதனை நிகழ்வு வெற்றி பெற நல்கினர்.

தமிழகத்தில் மறைந்த மேதகு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பொண் மொழிகளை மாணவ, மாணவியர் ஆளுக்கு ஒரு பொன்மொழி என்கின்ற விகிதத்தில் மேடையில் ஏறி வாசித்தது இதுவே முதல் முறையாகும். இச்சாதனை நிகழ்வை will state record நிறுவனர் தலைவர் கவிஞர் கலைவாணி மற்றும் செயலர் பானு ஆகியோர் மேற்பார்வை செய்தனர்.

மேலும் 16.10.2018 அன்று புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ள அப்துல்கலாம் ஐயா அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்வில் வில் ஸ்டேட் ரெக்கார்ட் அங்கீகாரச் சான்றிதழ் ஆனது கலாம் மாணவர்கள் இயக்கத்திற்கு வழங்கப்பட உள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!