18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » கீழக்கரையில் பல சமூக அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆணையரிடம் புதிய சொத்து வரி குறித்து ஆட்சேப மனு… வீடியோ பேட்டி..

கீழக்கரையில் பல சமூக அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆணையரிடம் புதிய சொத்து வரி குறித்து ஆட்சேப மனு… வீடியோ பேட்டி..

எழுதியவர்: ஆசிரியர் October 8, 2018, 2:22 pm

கீழக்கரையில் 200 சதவீதம் வரை சொத்து வரிகள் உயர்த்தப்படுவதாக பத்திரிக்கைகளில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து இது சம்பந்தமாக ஆட்சேபனை தெரிவிக்க நாளை (09/10/2018) வரை அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று 08/10/2018) கீழக்கரையில் சட்ட விழிப்புணர்வு இயக்கம், மக்கள் டீம், எஸ்.டி.பி.ஐ கட்சி, விடுதலை சிறுத்தைக் கட்சி, மக்கள் நல பாதுகாப்பு கழகம், மக்கள் நுகர்வோர் நல அமைப்பு போன்ற பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த சமூக ஆர்வலர்கள் கீழக்கரை ஆணையரை நேரடியாக சந்தித்து மனுவை அளித்தனர்.

மேலும் மனு கொடுத்ததைத் தொடர்ந்து ஆணையரிடம் நேரடியாகவும் ஆட்சபேனைக்கான காரணத்தை எடுத்துரைத்தனர். இது சம்பந்தமாக கூறிய சமூக ஆர்வலர் ஒருவர் இது கீழக்கரைக்கு மட்டும் உட்பட்ட பிரச்சினை கிடையாதுää ஒட்டு மொத்த தமிழகத்திலும் மாற்றியமைக்கப்பட்ட சொத்து வரி விதிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கூறினார். (வீடியோ)

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!