17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » கீழக்கரையில் தொடரும் நாய் தொல்லை.. விழித்துக் கொள்ளாத நகராட்சி…

கீழக்கரையில் தொடரும் நாய் தொல்லை.. விழித்துக் கொள்ளாத நகராட்சி…

எழுதியவர்: ஆசிரியர் October 8, 2018, 12:15 pm

கீழக்கரையில் நாய் தொல்லை என்பது ஒரு முடிவில்லாத பிரச்சினையாக தொடர்ந்து வருகிறது. தொடர்ச்சியாக செய்ய வேண்டிய தடுப்பு நடவடிக்கைகளை பொது மக்கள் பாதிக்கும் பொழுதே செய்யத் தொடங்குகிறது. இதனால் எந்த பிரச்சினைக்கும் நிரந்தர தீர்வு என்பது அரிதாகவே உள்ளது.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு நாய் கடித்து சிறுவன் இறந்தது மற்றும் ஒரு பெண்மணியை நாய் கடித்து குதறியதையும் யாரும் மறந்திருக்க முடியாது. இந்நிiயில் இன்று (08/10/2019) காலை எஸ்.என் தெருவில் வசிக்கும் அப்பாஸ் என்பவரை கடித்து குதறியுள்ளது. அது போல் மஹ்தூமியா பள்ளியில் படிக்கும் ருக்மான் என்ற மாணவனையும் நாய் கடித்துள்ளது.

இது பற்றி மக்கள் டீம் அமைப்பு காதர், “இது சம்பந்தமாக கீழக்கரை ஆணையருக்கும் சில வாரங்களுக்கு முன்பு தெரு நாய்கள் சுற்றித் திரிவதைப பற்றி விளக்கி உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது சம்பந்தமாக இது வரை உடனடி நடவடிக்கவில்லை. இந்நிலை தொடர்ந்தல் பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாக நேரிடும்,  உடனடி நடவடிக்கை அவசியம் என கூறி முடித்தார். கீழக்கரை நகராட்சி உறக்கத்தில் இருந்து விழிக்குமா??

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!