17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » சமூக ஆர்வலரின் குரலுக்கு உடனே செவி சாய்த்த மதுரை ஆட்சியர் ..

சமூக ஆர்வலரின் குரலுக்கு உடனே செவி சாய்த்த மதுரை ஆட்சியர் ..

எழுதியவர்: ஆசிரியர் October 6, 2018, 5:01 pm

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாய் ரயில்வே சுரங்கப் பாதை அருகே அவனியாபுரம் பாசனப் பகுதிக்கு நீர் செல்லாமல் சில நாடகளாக அடைப்பு ஏற்பட்டு இருந்தது, இதுகுறித்து சமூக ஆர்வலர் காளமேகம், மதுரை மாவட்ட ஆட்சியாளரிடம் தொலைபேசி மூலமாக தகவல் தெரிவித்தார்.

இத்தகவல் அறிந்த ஆட்சியர் உடனடியாக அடுத்த 20 நிமிடத்தில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் ஜேசிபி எந்திரத்துடன் வந்து அடைக்கப்பட்ட நீரை வாய்க்கால் தோண்டி மறு வாய்க்கால் மூலமாக தண்ணீர் செல்லும்படி பணிகள் செய்தனர்.  இப்புகார் கொடுத்து 20 நிமிடத்தில் பணிகளை முடித்து விட்ட மாவட்ட ஆட்சியாளருக்கு மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் திருப்பரங்குன்றம் தாசில்தார் சுரேஷ் தலைமையில் பணிகளை மேற்கொண்ட அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல் .
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!