18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மண்டபம் முகாமில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு பேரணி..

மண்டபம் முகாமில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு பேரணி..

எழுதியவர்: ஆசிரியர் October 5, 2018, 10:52 pm

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாம் அரசு மேல்நிலைப் பள்ளி என்எஸ்எஸ் சார்பில் அக் 2 முதல் அக் 8 வரை ஒரு வார சிறப்பு நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக சுகாதார துறை சார்பில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. என் எஸ் எஸ், பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்ற பேரணியை தலைமை ஆசிரியர் வேல்முருகன் தொடங்கி வைத்தார். முக்கிய வீதிகள் வழியாக பேரணி சென்றது. இதன் பிறகு பள்ளியில் நடந்த சுகாதார விழிப்புணர்வு கருத்தரங்கில் மண்டபம் முகாம் அரசு மருத்துவமனை டாக்டர் ராஜா பேசினார். ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், மண்டபம் பேரூராட்சி டெங்கு தடுப்பு களப்பணியாளர்கள் சுகாதாரம் பேணுவோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

ஆசிரியர்கள் சந்தானலட்சுமி, ஷெப்ரின், திவ்யா, அமுதா, ஜெயசித்ரா, ஜீவரத்தினம், விஜயலட்சுமி, அழகு பாண்டி, சமூக ஆர்வலர் ராமச்சந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர். மண்டபம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் மெய்.ராமச்சந்திரன் ஏற்பாடு செய்தார்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!