17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரத்தில் முதியோர் தின விழா…

இராமநாதபுரத்தில் முதியோர் தின விழா…

எழுதியவர்: ஆசிரியர் October 2, 2018, 9:39 pm

இராமநாதபுரம் மாவட்ட மூத்த குடிமக்கள் கூட்டமைப்பு சார்பில் முதியோர் தின விழா நடந்தது. முதியோர் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலரும், சார்பு நீதிபதியுமான ராமலிங்கம் தொடங்கி வைத்தார்.

பின்னர் நடந்த விழாவிற்கு மூத்த குடிமக்கள் கூட்டமைப்பு தலைவர் சேசுராஜ் தலைமை வகித்தார். செயலாளர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். சார்பு நீதிபதி ராமலிங்கம், இன்னர் வீல் சங்கத் தலைவியும், ஆரோக்யா மருத்துவமனை மனநல மருத்துவர் வித்யா பிரியதர்ஷினி, இராமநாதபுரம் தமிழ் சங்கம், வியாபாரிகள் சங்க துணைத் தலைவர் கருணாநிதி ஆகியோர் பேசினர். முதியோர் தின போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், சங்க உறுப்பினர்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட மைய நூலக வாசகர் வட்டத் தலைவர் மங்கள சுந்தரமூர்த்தி நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பொருளாளர் ரவீந்திரன் நன்றி கூறினார்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!