18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரத்தில் காந்தி ஜெயந்தி கொண்டாட்டம்…

இராமநாதபுரத்தில் காந்தி ஜெயந்தி கொண்டாட்டம்…

எழுதியவர்: ஆசிரியர் October 2, 2018, 7:21 pm

இராமநாதபுரத்தில் காந்தி ஜெயந்தி விழா கொண்டாட்டம் நடந்தது.  இராமநாதபுரம் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள காந்தி சிலையில் தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மேலும் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, ஊராட்சிகள் உதவி இயக்குநர் செல்லத்துரை, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை, நகராட்சி உதவி செயற்பொறியாளர் சுப்ரமணியபிரபு உள்பட பலர் பங்கேற்றனர்.

காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் தெய்வேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நகர் தலைவர் கோபி, மாவட்ட பொதுச்செயலர் மணிகண்டன், செய்தி தொடர்பாளர் கவுசி மகாலிங்கம், வட்டார தலைவர் கோபால், மகளிரணி நிர்வாகி பெமிலா விஜயகுமார், சிறப்பு பேச்சாளர் விஜயன் உள்பட பலர் பங்கேற்றனர். காமராஜர் வாழ்க்கை வரலாறு பற்றிய துண்டு பிரசுரங்கள் மற்றும் இனிப்பு பொதுமக்களுக்கு வழங்கினர்.

சமத்துவ மக்கள் கட்சி இளைஞரணி சார்பில் இளைஞரணி ஒன்றிய செயலாளர் முத்துமுருகன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட இளைஞரணி துணை செயலர் வீரக்குமார், நகர் இளைஞரணி செயலாளர் பாலா, துணை செயலாளர் செந்தில் உள்பட பலர் பங்கேற்றனர். இராமநாதபுரம் நாடார் உறவினர் முறை சார்பில் காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.  
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!