18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இலவச கண் பரிசோதனை முகாம்..

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இலவச கண் பரிசோதனை முகாம்..

எழுதியவர்: ஆசிரியர் October 2, 2018, 6:48 pm

இராமநாதபுரம் அருகே சூரன்கோட்டையில் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம், நகர் அரிமா சங்கம், கிருஷ்ணன்கோவில் சங்கரா கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.

இந்த முகாமில் நகர் அரிமா சங்க முன்னாள் தலைவர் ராஜா தலைமை தாங்கினார். நிர்வாகிகள் லோகநாதன், சகாயம் முன்னிலை வகித்தனர். நகர் அரிமா சங்கத் தலைவர் இருதயராஜ் துவக்கி வைத்தார். டாக்டர் உதய் தலைமையில் கண் பரிசோதனை செய்யப்பட்டு கண் புரை ஆபரேஷனுக்காக 16 பேர் சங்கரா கண் மருத்துவமனை அனுப்பி வைக்கப்பட்டனர். பரமக்குடி ராஜா சேதுபதி அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் அய்யப்பன், தேவிபட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கண் மருத்துவ உதவியாளர் தவமணி ஆகியோர் முகாம் ஏற்பாடுகளை செய்தனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!